ஊரடங்கு: மாநிலம் திரும்ப விரும்புவோருக்கு தனி இணையதளம்! தமிழக அரசு ஏற்பாடு!

Published:

tamil nadu arasu
tamil nadu arasu

பிற நாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப விரும்புவோர்க்காக தமிழக அரசு தனி இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளது.

பிற நாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப விரும்புவோர்க்காக தமிழக அரசு தனி இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளது.

இது தொடர்பாக வியாழனன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது:

கொரோனா ஊரடங்கின் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாலான மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் இதர தரப்பினர் வெளிநாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப முடியாமல் உள்ளனர்.

எனவே தற்போது தமிழகம் திரும்ப விரும்புபவர்கள் தங்களது விபரங்களை www.nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எத்தனை பேர் ஊர் திரும்ப விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கான மற்ற ஏற்பாடுகளைத் திறம்பட செய்ய இயலும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img