13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞன்! போக்சோவில் கைது!

Published:

vankodumai

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெங்காட்டில் அருண் என்பவர் வசித்து வருகிறார். பக்கத்து ஊரில் இவரது மாமா வசித்து வருகிறார். அவருக்கு 13 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது.

மாமா வீட்டிற்கு அருண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அருண் மாமன் மகளிடம் நெருங்கி பழகி, ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் ரீதியாக பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். மேலும் பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார் இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் அருணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

Related articles

Recent articles

spot_img