செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் விலகல்

avvainatarajanசென்னை: செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியில் இருந்து ஔவை நடராஜன் இன்று பதவி விலகினார். இது குறித்து அவர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட செய்தியில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவி மூதறிஞர் ஔவை நடராசன் அவர்களை காங்கிரஸ் அரசு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத்தலைவர் பதவியை முதன்முதலாக சென்னையில் உருவாக்கி கடந்த 2014-ஆம் வருடம் மார்ச் மாதம் 1-ம் (1.3.2014) – தேதியில் நியமித்திருந்தார்கள். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி பதவிக்கு வந்ததும் அவருடைய பதவியிலிருந்து நீக்கம் செய்து பேராசிரியர் பிரகாசம் என்பவரை நியமனம் செய்தனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து அந்த ஆணைக்குத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும்போதே இன்று காலை துணைத்தலைவர் பதவியிலிருந்து ஔவை நடராசன் விலகினார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற தாய்மொழித் திருநாள் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ஔவை நடராசனின் பணிகளைப் பாராட்டினார். அமைச்சரே பாராட்டியதும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சிக்கல் தீர்ந்தது என்றே கருதினோம். ஆனால் அறிஞர் ஔவை நடராசன் அவர்கள் தன் சொந்தக் காரணங்களால் பதவி விலகியதாக இன்று ஒரு கருத்தரங்கில் நகைச்சுவையோடு கூறினார். அவர் வேறு எந்த விளக்கமும் தரவில்லை. ஔவை நடராசன் அவர்களுடைய இழப்பு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ஒரு பெரிய களங்கமாக என்றும் இருக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் முன்னை சிறப்பு வருகைப் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் இந்த செய்திக்கு உடனே அங்கேயே விடை கூறினார். தகுதியும், தகைமையும், பெருமிதமும் வாய்ந்த தமிழறிஞர் ஔவை அவர்களைப் பதவியில் இருந்து நீக்கிவிடுவதில் மத்திய அரசு முனைப்புக் காட்டுவது தமிழுக்குச் செய்யும் பெரும் தீங்காகும் என்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் தொடர்ந்து குறிப்பிட்டார். – என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories