அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் முடிந்து இருந்த பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்த பெற்றோர்! பதறிய காதல் கணவன்!

தமிழகம் லைஃப் ஸ்டைல்
register-marriage

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூவரசன்(28). இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர்.

இருவரும் பட்டதாரிகள் என்பதால் சென்னை வந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது பல இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். அதனால் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் பதிவுத்திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட இருவரும் பிரிந்து தங்களது ஊருக்கு திரும்பினர்.

இந்தநிலையில் அந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவருக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். இதுகுறித்து இளம்பெண் தனது காதலன் மூவரசனுக்கு இ-மெயில் மூலம் தெரிவித்தார். மேலும், தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மூவரசன், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். மேலும் எனது காதலியை மீட்டுத்தந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார். தற்போது போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.