பிரகாஷ்ராஜ் கேள்விக்கு ஒரு பாமரனின் பதில்

Published:

பிரகாஷ்ராஜ் கேள்வி:

எனது பாசமிகு பிரதமருக்கு
அன்புள்ள ஐயா,
150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று???
இப்போதாவது நீங்கள் சில உண்மைகளை உணர நேரம் ஒதுக்குவீர்களா?

a) பிரிவினைவாத அரசியல் எடுபடவில்லை என்பதை உணர்வீர்களா?

b) பாகிஸ்தான்.. மதம்.. சாதி.. என சமூகத்தை அச்சுறுத்தும் சில அடிப்படைவாதிகள் ஆதரிக்கும் இத்தகைய கொள்கைகளைத் தாண்டியும் இந்தியாவில் மிகப் பெரிய பிரச்சினைகள் உள்ளன என்பதை உணர்வீர்களா?

c) கிராமப்புறங்களில்தான் தீர்க்கப்பட வேண்டிய உண்மையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதை உணர்வீர்களா?

விவசாயிகள்… ஏழைகள்.. கிராமவாசிகளின் புறக்கணிக்கப்பட்ட குரல் இப்போது வலுப்பெற்றிருக்கிறது.

அது உங்களுக்கு கேட்கிறதா..?

சும்மாத்தான் கேட்கிறேன்-நடிகர் பிரகாஷ் ராஜ்

என் பதில்…
வில்லன் நடிப்பை விட
மூளை முழுக்க விஷம் ஏறியுள்ள
நிஜ வில்லனான பிரகாஷ்ராஜ்”க்கு…

நீங்கள் சும்மா கேள்வி கேட்க..
பிரதமர் மோடி என்ன சும்மாவா இருக்கிறார்..

நாலு ஊடகங்கள் நீங்கள் சொல்லுவதை வெளியிடும் என்றால் நீங்கள் மோடிக்கு நிகரானவர் என்ற நினைப்பா…

ALSO READ:  கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

அத்தனை பிரிவினைவாதிகளும் இணைந்து எதிர்த்த பிறகும் பா.ஜ.க வெற்றி பெற்றிருப்பதால் உங்கள் மூளை குழம்பி விட்டதா..?

பிரிவினைவாதம் செய்தது யார்?

படேல் சாதி, பழங்குடியினர் சாதி , தலித் சாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்து சாதி ரீதியாக
தேர்தலை சந்த்தித்தது யார்?

கோவில், கோவிலாக சென்று பஜனை பாடி சிவபக்தன் என்று கூறி மதவாத அரசியல் செய்தது யார்?

முஸ்லீம்களுக்கு முதன் முறையாக ஒரு தொகுதி கூட ஒதுக்காமல் மதசார்பற்ற கட்சி என நடித்தவர்கள் யார்?

பா,ஜ.க.வுக்கு வாக்களிக்க கூடாது என மத தலைவர்கள் அறிக்கை விட்டது ஏன்?

ஏழைகளுக்கு ரேஷன் ரத்து// வங்கி பணம் திரும்பி கிடைக்காது என குஜராத் கிராமப்புற பகுதிகளில் புரளி கிளப்பியவர்கள் யார்?

அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட அனைத்து கட்சி தலைவர்களும் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை..பா.ஜ,க ஜெயிக்க கூடாது என குஜராத் மக்களிடம் கெஞ்சிய பிறகும் …

இத்தனைக்கு பிறகும் குஜராத் , இமச்சால் இரு மாநிலங்களிலும் வெற்றி பெற்ற பா.ஜ.கவிடம் போய் 150 தொகுதிகளில் ஏன் ஜெய்க்க வில்லை என கேட்டு உங்கள் வயிற்றெரிச்சலை தீர்த்து கொள்ளும் உங்களுக்கு மீசை இல்லை இருந்திருந்தால் மண் ஒட்டியிருந்திருக்கும்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலில் நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளுங்கள்…..

மோடியிடம் கேள்வி கேட்க கூடிய அளவு நீங்கள் அவ்வளவு பெரிய ஆள் இல்லை..

என்னை போன்ற ஒருவன் உங்களுக்கு பதில் தருவதே உங்கள் தகுதிக்கு அதிகம்…

Related articles

Recent articles

spot_img