
இந்து பண்டிகையை சீர்குலைக்க இத்தனை சதிகளா? இந்துக்கள் விழிப்புடன் செயல்பட்டு சதிகளை முறியடிக்க வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக காங்கிரஸ் அரசு தீபாவளி அன்று படடாசு வெடிக்க கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதுபோல தமிழ்நாடு உணவு கட்டுப்பாட்டு துறை இனிப்பு, பலகாரங்களுக்கு கட்டுப்பாடுகளை புதிதாக அறிவித்து மிரட்டுகிறது.
மாசு கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் என இவர்கள் அனைவரும் இந்துக்களின் பண்டிகை, விழாக்களுக்கு மட்டும் திடீரென தோன்றி அறிவுரை, எச்சரிக்கை விடுக்கும் அதிசய பிறவிகள். இவர்களின் நோக்கம் ஒன்றுதான், அது பண்டிகைகளில் ஏற்படும் இந்துக்களின் உற்சாகம் மற்றும் ஒறறுமையை சீர்குலைப்பதுதான்.
இந்த கட்டுப்பாடுகள் தேவையில்லை என்று இந்து முன்னணி கூறவில்லை. அதேசமயம் வருடம் முழுவதும் இந்த அறிவுரையை செயல்படுத்துகிறார்களா? தீபாவளி இனிப்பு, பலகாரத்திற்குப் பொருந்தும் தர நிர்ணயம், ரம்ஜான் பிரியாணிக்கும், கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்புக்கும் பொருந்தும் அல்லவா?
வீதிக்கு வீதி பீப் பிரியாணி அலுமினிய வட்டாவில் எழும் சத்தம் இந்த உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் காதில் விழவில்லையா என்ற கேள்வி சாதாரண மக்களுக்கும் எழுகிறது.
கர்நாடக காங்கிரஸ் அரசின் பட்டாசு வெடிக்க அறிவித்திருக்கும் கட்டுப்பாடு, தமிழக பட்டாசு உற்பத்தி தொழிலை பாதிக்கும் என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
கூட்டணியில் இருக்கும் திமுக இதுபோன்ற நேரங்களில், தமிழக நலன் கருதி முதல்வரின் நண்பரான, கூட்டணி கட்சியான காங்கிரஸ் முதல்வர் சித்தராமைய்யாவிடம் பேசி தமிழக தொழில்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் பிரதமர் மோடி அவர்களின் வேண்டுகோளின்படி சுதேசி பொருளாதாரத்தை உயர்த்த, நமது பண்டிகை காலங்களில் உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு தர வேண்டும் எனற கருத்தை நினைவுகூர்கிறோம்.
நமது பண்டிகைகள் யாவும் இறைவனை வழிபடுவது ஆகும். எனவே இந்துக்கள் புனிதமான, பவித்தரமான பொருட்களை வாங்கிட நமது நம்பிக்கையை பின்பற்றுவோரின் தயாரிப்புகளை, பொருட்களை வாங்கி இறைவனுக்குப் படைத்து கொண்டாட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பண்டிகை நேரத்தில் தான் அரசு ஊழியர்களின் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர்களின் சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை செய்கின்றன. இதுவும் இடதுசாரி அமைப்புகளின் வேலையாக இருக்கிறது.
எனவே தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க நடக்கும் திட்டமிட்ட சதிகளை முறியடிக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து பண்டிகைகளை குதூகலமாக கொண்டாடுவோம். தமிழக அரசும் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்பட கேட்டுக்கொள்கிறோம்..





