வாட்ஸ்அப் பயனாளிகளே உஷார்! மத்திய அரசு நிறுவனம் எச்சரிக்கை!

Published:

whatsapp spy - 2026

சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் புகுந்து பயனாளிகளின் தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய அரசு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது

வாட்ஸ்அப் சமூக வலைதளத்தை உலகம் முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்! இந்தியாவில் 40 கோடி பேர் வாட்ஸ்-அப் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடான துருக்கி நிறுவனம் ஒன்று பிகாசஸ் என்ற உளவு மென்பொருள் தயாரித்துள்ளது. இந்த உளவு மென்பொருள் மூலம் வாட்ஸ்அப் பயனாளிகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டது என்று அண்மையில் சர்ச்சை எழுந்தது.

அப்போது, இந்தியாவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் விவரங்கள் இந்த மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகவல் திருட்டு தடுப்பு தகவல் பாதுகாப்புக்கான சர்ட் இன் எனப்படும் இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்புக் குழு என்ற அமைப்பு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது!

அதில், வாட்ஸ்அப் சமூக வலைத்தளத்தில் நுழைந்து தகவல்களை திருடுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறிப்பாக mp4 என்ற மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகளுக்கே தெரியாமல் அவருடைய தகவல்களை திருடுவதற்கு வாய்ப்பு உள்ளது.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இந்தக் குறை இன்னும் சரி செய்யப்படவில்லை! இதுபோன்ற மென்பொருளின் அடிப்படையில் வரும் செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் பயனாளிகள் தங்களுடைய மொபைல் போனில் வாட்ஸ் அப் செயலியை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும் அதாவது அவ்வப்போது அப்டேட் செய்துகொள்ள வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img