ஊடகங்களின் நம்பகத்தன்மை சீர்கெட… அதில் பணியாற்றுபவர்களே காரணம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை துணுக்குகள் லைஃப் ஸ்டைல்

modi ji - 2026

ஊடகம் என்ற முகமூடியோடு இனி எங்களை அச்சுறுத்த முடியாது. விடுதலை போராட்ட காலத்தில், ஊடங்களின் பணி சத்தியாகிரகதிற்கு நிகரானது. ஊடகங்களை நடத்தி கொண்டிருந்தவர்கள் பல இன்னல்களை சந்தித்தனர். ஊடகங்களின் பெருமை, மதிப்பு அதன் மூலமே உருவானது.

ஒரு காலத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழை கையிலெடுத்து படித்தால், ஒரு செய்தியை எழுதியது ராவிஷா, ராகுலா அல்லது வேறொருவரா என்றெல்லாம் பார்க்கமாட்டேன். ஏனென்றால் என்னை பொறுத்த வரை அது இந்தியன் எக்ஸ்பிரஸ் என்கிற ஊடக செய்தி.

ஆனால், சமூக ஊடகங்களின் வருகையினால், ராவிஷின், ராகுலின், மற்றவர்களின் தனிப்பட்ட பதிவுகளை பார்க்கிறேன். அது பத்திரிகையாளர்களின் உணர்வு என்ற முகமூடியை அணிந்து கொண்டிருக்கிறது. உங்களுடைய தனிப்பட்ட பார்வைகள் சமூக ஊடகங்களில் வெளிப்படையாக தெரிகிறது. ஊடகவியலாளர்களின் தனிப்பட்ட எண்ணங்கள், கருத்துக்கள் ஊடகங்களில் பிரதிபலிக்கும் போது, மக்கள் அது நடுநிலை தன்மை கொண்ட ஊடகங்கள் இல்லை என்பதை உணர்கிறார்கள்.

உங்களுடைய நன்மதிப்பை பாதுகாத்துக்கொள்ள நீங்கள் கட்டுப்பாடோடு இருப்பது அவசியமாகிறது. முந்தைய நாட்களில் பத்திரிக்கை ஆசிரியர்கள் சில கருத்தரங்கில் பேசிய போது அவை, தவறாக எடுத்து கொள்ளப்பட்டதில்லை. இன்று அது போன்ற நிலை இல்லை. ஊடகங்களின் நம்பகத்தன்மை குறித்த இன்றைய நிலைக்கு ஊடகங்கள் காரணம் அல்ல. அங்கே பணியாற்றுபவர்கள் தான்.

(நரேந்திர மோடி அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.)

  • நாராயணன் திருப்பதி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.