ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 
குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்களில் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இவர்களில் 80 சதவீத பயணிகள் நூற்றாண்டை கடந்த புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 

இதனால் மலை ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா தொற்று குறைந்து விட்டதால் ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது.  அதன்படி ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06140) ஊட்டியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற மே 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06141) ஊட்டியில் மதியம் 12.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயிலில் முன்பதிவில்லா 2 பெட்டிகள் வருகிற 4-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06138) குன்னூரில் மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

அதுபோல் ஊட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சிறப்பு ரெயில் ஊட்டியில் காலை 9.15 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

குன்னூரில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06143) குன்னூரில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் 2 முன்பதிவில்லா பெட்டிகள் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் சிறப்பு ரெயில் (எண்.06136) மேட்டுப்பாளையத்தில் காலை 7.10 மணிக்கு புறப்படும். இந்த ரெயிலில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து மேலும் ஒரு முன்பதிவில்லா பெட்டியும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்பட உள்ளது. 

ALSO READ:  மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

ஊட்டியில் இருந்து குன்னூர் வரை 2 முன்பதிவில்லா பெட்டியும், குன்னூரில் இருந்து ஒரு முன்பதிவில்லா பெட்டி மேட்டுப்பாளையம் வரையும் வருகிற ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. 

இவ்வாறு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

images 35 2 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories