திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் தீ விபத்து: பல கோடி மதிப்பு பொருள்கள் நாசம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை வீடியோ

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் அடைந்தது!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த புதூர் அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள எல் எஸ் என்ற மென்பொருள்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் இரவு திடீரென்று தீப்பற்றியது.

இரவு நேரத்தில் பணிபுரியும் பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று தீப்பற்றிய சம்பவம் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விபத்தில், உயிர்ச் சேதம் இன்றியும் தீக்காயங்கள் இன்றியும் பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இருப்பினும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் அடைந்தது.

சம்பவ இடத்திற்கு வந்த கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீப்பற்றியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.