அடிவயிறில் இருந்து அலறும் எடப்பாடியின் ‘அந்த’ பேச்சு… மீண்டும் வைரலாகிறது!

Published:

ஜாக்டோ ஜியோ போராட்டம் கடந்த வருடம் மீண்டும் கிளப்பப் பட்ட போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது குறித்து தமது கட்சிக் கூட்டத்தில், கட்சியினருக்கு விளக்கும் வகையில் பேசினார். அப்போது அவர், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்துப் பேசினார். அந்தப் பேச்சு அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. பலராலும் சமூகத் தளங்களில் பகிரப் பட்டது. இந்நிலையில் தற்போது ஜாக்டோ ஜியோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் உச்சமடைந்துள்ள நிலையில், மீண்டும் அந்த ஆடியோ பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பவை….

அரசு ஊழியர்களை குத்திவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் நன்றாக சிந்தித்து பாருங்கள் இப்போ பள்ளிக்கூடத்தில் இருக்கிற ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு தலைமை ஆசிரியருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா 82 ஆயிரம் ரூபாய் தலைமை ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் ஐந்தாம் வகுப்பு ஆசிரியருக்கு 82 ஆயிரம் ரூபாய் சம்பளம் நம்ம பையனோ பி இ படித்து விட்டு கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு வேலைக்கு சென்றால் கூட பத்து வருடம் கழித்து ஐம்பதாயிரம் ரூபாய் தாண்ட மாட்டான் லீவு எவ்வளவு நாள் தெரியுமா 160 நாள் லீவு பாஸ் பெயில் என்பதே கிடையாது நீ படித்தாலும் சரி படிக்காவிட்டாலும் சரி அப்படியே விட்டுவிடுவார்கள் இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்தினால் யார் ஏற்றுக் கொள்வது 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் இவர்களுக்கு சம்பளம் கொடுக்கப் பட்டிருக்கிறது அரசு ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு ஏழாவது நிதிக் குழு பரிந்துரையின் படி கொடுக்கப்பட்டுள்ளது… என்ற ரீதியில் போகிறது அவரது பேச்சு…!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img