
இரவில் சார்ஜிங்கில் போனை போட்டு விட்டு, அதில் இயர் போனை மாட்டி பாட்டு கொண்டிருந்த சிறுமி, மறுநாள் காலையில் போன் சார்ஜர் வெடித்த நிலையில், பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரவில் சார்ஜில் போனை போட்டு விட்டு, பிறகு அதில் இயர் போனை மாட்டி பாட்டு கொண்டிருந்த சிறுமி, மறுநாள் காலையில் போன் சார்ஜர் வெடித்த நிலையில், பரிதாபமாக இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானை சேர்ந்த 14 வயது.சிறுமி ஆல்வா அசெட்கிஸி அப்சல்பெக். இவர் நேற்று முன்தினம் இரவு போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்க சென்றார். அவர் தூங்கும் போது தனது தலையணைக்கு அருகில் சார்ஜ் போட்டுக் கொண்டே தூங்கியதால் போன் சூடாகி வெடித்துள்ளது.

நேற்று காலை சடலமாக கிடந்த மகளைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த சிறுமியின் தலை அருகே இருந்தால் படுகாயம் ஏற்பட்டு, உயிர் பிரிந்துள்ளது.போன் வெடித்து சிறும உயிரிழந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள. அவரின் தலையைணைக்கு அருகே சார்ஜர் பிளக் போர்ட்டில் இருப்பது தெரியவந்துள்ளது. போன் எந்த கம்பெனியை சேர்ந்தது என்று தெரியவில்லலை. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.



