காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல்!

உலகம்
pakishthan - 2026

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாப்பூர் மற்றும் கெர்னி செக்டார்களில் இன்று பாகிஸ்தான், சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் மோர்ட்டார் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் தகுந்த பதிலடி கொடுத்தபடி உள்ளது..

இந்த சண்டையில் இதுவரை யாரும் காயமடைந்ததற்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.