சரிகின்ற பாகிஸ்தான் பொருளாதாரம்! இம்ரானுக்கு முன்னால் செயல்பட்ட தளபதி!

Published:

imran - 2026

பாகிஸ்தான் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்காக அந்நாட்டின் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, தொழில்அதிபர்களை அழைத்து விவாதித்து உள்ளார்.

பாகிஸ்தானனுக்கு வெள்ளைக்காரன் சுதந்திரம் கொடுத்து சென்ற 1947 முதல் தற்போது வரை அதாவது 72 வருட காலத்தில் ராணுவம் தான் பாதி ஆண்டுகள் ஆட்சி நடத்தி உள்ளது. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைவிட அதிக அதிகாரம் மிக்கதாக ராணுவம் உள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தானில் யார் ஆட்சி செய்தாலும் ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆட்சியில் தொடர முடியும். அரசின் ஒவ்வொரு முக்கிய சீர்திருத்த நடவடிக்கையிலும் ராணுவத்தின் தலையீடு நிச்சயம் இருக்கும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்து இருந்தார். இதன்படி ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வாவுடன் நட்பு பாராட்டி வரும் இம்ரான் கான் , அவருக்கு மூன்று ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கி இருந்தார்.

பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது. பாகிஸ்தானில் உள்நாட்டு உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளளது. இதனால் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.9 சதவிகிதமாக பற்றாக்குறை அதிகரித்து உள்ளது.

kamaljaweth bhajva - 2026

இதையடுத்து பாகிஸ்தானில் சரிந்துகிடக்கும் பொருளாதாரத்தை சரிசெய்யவும், முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் விரும்பிய அந்நாட்டு ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, தொழில்அதிபர்களை அழைத்து விவாதித்து உள்ளார்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இம்ரான் கான் அரசு இருக்கும் போது, பாகிஸ்தான் ராணுவ தளபதியே பொருளாதார பிரச்சனைகளை தொழில்அதிபர்களுடன் விவாதித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தினாலும் அந்த ஊர் மக்கள் அதை ஆதரிப்பது தான் ஆச்சர்யமான உண்மை.

ராவல் பிண்டி, கராச்சி உள்பட ராணுவ தலைமையங்கள் உள்பட மூன்று இடங்களில் தொழில்அதிபர்களை சந்தித்தும், பொருளாதார நிபுணர்களை சந்தித்தும் ஆலோசனை நடத்தி உள்ளார். தொழில் அதிபர்களிடம் பொருளாதாரத்தை சரிசெய்வது எவ்வாறு, முதலீடுகளை அதிகரிக்க எது வழிவகுக்கும் உள்ளிட்ட கேள்விகளை கேட்டுள்ளார்.

அப்போது நடந்த விவாதங்களுக்கு பின்னர் அரசின் அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளையும் வழிகாட்டுதல்களையும் ராணுவ தளபதி பிறப்பித்தாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Related articles

Recent articles

spot_img