துருக்கி மீது பொருளாதார தடை: டிரம்ப் அதிரடி!

Published:

05 June05 Trump - 2026

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில்

துருக்கி தலைவர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்தான வழியை தேர்வு செய்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன். அமெரிக்கா – துருக்கி இடையே நடக்கும், 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளேன்.

தொடர் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கூடுதல் தடை விதிக்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

துருக்கி மீது தடை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

Related articles

Recent articles

spot_img