கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன சொகுசு சொத்துத் திட்டம் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொழும்பு புறநகர்ப் பகுதியில் சீன நிறுவனங்கள் கட்ட இருந்த சாலைக்கு ஆகும் செலவினை, 520 மில்லியன் டாலரில் இருந்து 225.73 மில்லியன் டாலராகக் குறைத்துக்கொள்ள ஒப்புக் கொண்டதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன கூறியுள்ளார். முந்தைய அதிபர் ராஜபட்சவின் அரசில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. அப்போது, உலக நாடுகள், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இலங்கையை ஒதுக்கியே வைத்திருந்தன. அந்நேரத்தில், சீனா அதிக ஆர்வம் காட்டி இலங்கையில் முதலீடுகள் பல செய்ய முன்வந்தது. இலங்கையின் கட்டமைப்பை மேம்படுத்த பெரிய அளவில் முதலீடு செய்தது சீனா. இந்நிலையில், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபர் சிறீசேன, சீனா 1.4 பில்லியன் டாலர் செலவில் செயல்படுத்த இருந்த துறைமுக நகர்த் திட்டத்தை ரத்து செய்தார். இது, சீனாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சீறீசேன இந்தியாவுடன் காட்டிய நெருக்கம், சீனாவுக்கு மேலும் அதிருப்தியை உண்டாக்கியது. இத்தகைய சூழலில்தான் மார்ச் 29-ல் சிறீசேன சீனா சென்றார். இருப்பினும், அப்போது துறைமுக நகர்த் திட்டம் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் பேசவில்லை என்றே கூறினார் அரசு செய்தித் தொடர்பாளர் ரஜித சேனாரத்ன. இருந்தபோதிலும், சுற்றுப்புறச் சூழல், பாதுகாப்பு, சட்டம், நில உரிமை ஆகிய அம்சங்களைக் கருதி ஒரு முடிவு எடுக்கப்படும் என்று சிறீசேன அங்கே கூறியுள்ளார். மேலும், அப்போது, சீன அதிபர் ஜீ ஜின் பிங், இந்த விவகாரத்தில் சர்ச்சை எதுவும் ஏற்பட்டால், இலங்கை – இந்தியாவுடனான முத்தரப்புப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடத் தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தாராம். இத்தகைய பின்னணியில்தான் ரஜித சேனாரத்ன, சீனாவின் நிதியுதவி குறித்துக் கூறியுள்ளார். இது, சீனாவின் பக்கம் இலங்கையை இழுப்பதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
இந்தியா
சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம். மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது. தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி
கட்டுரைகள்
கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

சினி நியூஸ்
திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!
நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
உரத்த சிந்தனை
வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!
பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.