இதுக்கு எங்களை நிர்வாணமாகவே அனுப்பலாம்! டாக்டர், நர்ஸ் போராட்டம்!

Published:

england - 2026

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காக அங்கிருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வாரத்தின் துவக்கத்தில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் துவங்கியது. அதாவது, செவிலியர்கள் பலர் அரசாங்கத்திற்கு எதிராக நிர்வாணமாக புகைப்படங்களை வெளியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள எங்களை நிர்வாணமாக அனுப்புகிறார்கள் என்று குறிப்பிட்டு, #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வயதினரின் மருத்துவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பிரான்சின் செவிலியர் ஒருவர் கூறுகையில், அரசாங்கம் அனைவருக்கும், எங்கள் நோயாளிகளுக்கும், நமக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.இதன் காரணமாகவே, இந்த தொற்றுநோயை எதிர்கொள்ள அரசாங்கம் எங்களை நிர்வாணமாக அனுப்புவதால் நிர்வாணமாக இருக்க இந்த பிரச்சாரத்தின் மூலம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எல்லோரும் பயப்படுகிறார்கள், ஏனெனில் நோயாளிகளை பார்க்கிறோம், அதன் பின் வீட்டிற்கு செல்கிறோம். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பார்ப்பதால், நாமே அந்த நோயை வீட்டிற்கு கொண்டு வர முடியும் என்று நினைக்கின்றனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

Related articles

Recent articles

spot_img