பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருக்கும் நிறுவனம்! பயத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!

உலகம் பொது தகவல்கள் வேலைவாய்ப்பு
worker

கொரோனா வைரசால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனமும் அதற்கு விதிவிலக்கல்ல. உலகம் முழுவதும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக பெரும் இழப்பை சந்தித்து வரும் அந்நிறுவனம் நிலைமையை கட்டுப்படுத்த ஊழியர்களில் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் ஏர்வேசின் தலைமை நிறுவனமான சர்வதேச விமான போக்குவரத்து குழுமத்தின் முக்கிய அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேசில் வேலை செய்துவந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.