பாலில் குளியல்… ஒருவர் கைது!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
milk-bath
milk-bath

சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவர் வரை பால் அருந்துவதும் பாலால் ஆன பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வதும் பார்த்திருக்கிறோம். அதோடு பாலில் கலப்படம் செய்து பணம் சம்பாதிப்பவர்களையும் கண்டுள்ளோம். பால் உற்பத்தியில் சுகாதாரம் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறோம்.

அப்படி இருக்கையில் ஒரு டெய்ரி ஃபாமில் பணிபுரியும் ஒரு ஊழியர் பால் தொட்டியில் குளிக்கும் வீடியோவைப் பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

டர்க்கியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். வீடியோவில் அந்த மனிதர் குவளையால் எடுத்துத் தலைமீது பாலை ஊற்றிக் கொள்கிறார்.

செய்தி அறிந்த போலீசார் பாலில் குளித்தவரை கைது செய்து சிறையில் தள்ளினர். அதுமட்டுமின்றி வீடியோ எடுத்த மனிதரையும் கூட பாதுகாப்பில் எடுத்துக் கொண்டனர். அந்த டெய்ரியை மூடி விடும்படி உத்தரவிட்டனர்.

இத்தனை பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோவை நீங்களும் இதோ பாருங்கள்…

https://youtu.be/7m5bTu3pWaY

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.