சிட்னி: விராட் கோலி மிகவும் மோசமாக விளையாடி ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறியதற்கு, அனுஷ்கா சர்மாவை வம்பிழுக்காதீர்கள் என்று இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியுள்ளார். இது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்று அவர் கூறியுள்ளார். நேற்று அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து, கோலியைக் குறித்தும் அனுஷ்கா சர்மாவை வறுத்தெடுத்தும் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் காய்த்து எடுத்து விட்டார்கள். இந்நிலையில், இது முதிர்ச்சியற்ற செயல் என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி. இந்த விவகாரத்தில் அனுஷ்கா சர்மா செய்த தவறு என்ன? மற்ற குடும்பத்தினர் போல், அவரும் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க இங்கு வந்துள்ளார்… அவ்வளவுதான். இதற்கும் கோலியின் பேட்டிங்க்கும் என்ன தொடர்பு? இது மோசமான ஒன்று. இரண்டு பேர் காதலிப்பது ஒன்றும் அப்படி மோசமான செயல் அல்லவே” என்று கூறியுள்ளார் சௌரவ் கங்குலி.
கோலி ஆட்டத்துக்கு அனுஷ்காவை வம்பிழுக்காதீர்கள்: சௌரவ் கங்குலி
Popular Categories


