இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எண்ணெய் கிணறு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 12க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.fire 1 - 2026

இந்த எண்ணெய் கிணற்றில் இன்று உள்ளூர் நேரப்படி 1.30 அதிகாலை பெரியளவிலான தீ பற்றியது. இந்த தீ விபத்தில் முன்று வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை 10 பேரின் உடல்கள் கைபற்றப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைகிடமாக இருப்பதால் உயிரிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் ஜார்த்தாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending