அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பூடான் பிரதமர் ஷ்ரின் டொப்காய் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அண்டை நாடுகளுடன் நட்புறவு பேணும் மோடி, நாட்டுக்கு வெளியிலும் அண்டை நாட்டுத் தலைவர்களை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வியாழன் அன்று வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்துப் பேசினார். நேபாள பிரதமர் சுஷில் கொய்ராலா தனது பயணத்தை உள்நாட்டு எதிர்ப்புப் பிரச்னை காரணமாக ரத்து செய்தார். பாகிஸ்தான் பிரதமரைச் சந்திக்கும் திட்டம் இல்லை என்று முன்னரே இந்தியத் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நேற்று, இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன, பூடான் பிரதமர் டொப்காய் ஆகியோரை சந்தித்து உரையாடினார் மோடி.


