10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா இன்று தொடக்கம்

உலகம் சற்றுமுன்

12 June20 Dog meat festival day - 2026சீனாவின் குவாங்ஸி மாகாணத்தின் யூலினிக் ஆண்டு தோறும் லிச்சி நாய் இறைச்சி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இவ்விழாவுக்கு உலகம் முழுவதும் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு யூலின் லிச்சி நாய் இறைச்சி இன்று தொடங்குகிறது. சுமார் 1 வாரம் இந்த நாய் கறி திருவிழா நடைபெறும்.

கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இத்தகைய திருவிழா நடைபெற்று வருகிறது. சீனர்களைப் பொறுத்தவரை கோடைகாலங்களில் நாய் இறைச்சியை பெருமளவு உண்பது உடலுக்கு நல்லது என்பது நம்பிக்கை. அதேபோல் தங்களது பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தும் நாய்களை பலியிடுதலும் அரங்கேறும்.

ஆனால் இத்திருவிழாவில் விற்பனை செய்வதற்காகவே ‘நாய் வேட்டை’ ‘நாய் திருட்டு’ அமோகமாக நடைபெறுகிறது என்பது விலங்குகள் நல ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. அத்துடன் மிகக் கொடூரமான முறையில் கூண்டுகளில் அடைத்து யூலினுக்கு நாய்கள் கொண்டு வரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

யூலின் திருவிழாவில் நாய்கள் உயிருடன் விற்பனை செய்யப்படும். விற்பனை செய்யப்படும் நாய்கள் அங்கேயே வெட்டப்பட்டு அல்லது உயிருடன் தீயில் வாட்டப்பட்டு இறைச்சியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். நாய்கள்தான் என்று இல்லை பூனைக்கறியும் இந்த திருவிழாவில் தாராளமாகக் கிடைக்கும்.

இப்போது இத்திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பிரசாரத்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.