10 வயது சிறுமிக்கு இரண்டரை லட்சம் விலைபேசி… திருமணம் செய்த நபர் கைது!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

child marriage pakistan police arrested man - 2026

பாகிஸ்தானில் உள்ள  ஷிகார்பூர் நகரில் வசித்து வருபவர் முகமது சோமர். 40 வயதான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வந்தது.

ஆனால் மணப்பெண்ணுக்கு  இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லாததால்  மண மேடையில் அழுது கொண்டே இருந்துள்ளார். இதனை கவனித்த திருமணத்திற்கு கலந்துகொள்ள வந்த ஒரு நபர் போலீசில் புகாா் அளித்துள்ளாா்.

இருப்பினும் தகவல் அறிந்து போலீஸார் அங்கே வருவதற்கு முன்பே திருமணம் நடந்து முடிந்து விட்டது.

பின்னர் போலீஸார் மணப்பெண்ணாக அலங்காிக்கப்பட்ட அந்தச் சிறுமியை அவர்கள் மீட்டதோடு, முகமது சோமரை கைது செய்தனர். அதனைத் தொடா்ந்து  மேற்கொள்ளப் பட்ட விசாரணையில், அந்தச் சிறுமியின் தந்தைக்கு இரண்டரை லட்சம் ரூபாய் பணம் கொடுத்து மயக்கி திருமணம் செய்ததும், பணத்தின் மீதுள்ள ஆசையால் சிறுமிக்கு 17 வயதாகிறது என பொய் கூறியதும்  தெரியவந்தது.

இதை அடுத்து அவர்கள் இருவரையும் இந்தத் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள வைத்து பேசிக் கொண்டு  வந்த திருமண  தரகரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.