உலகக் கோப்பை போட்டியுடன் ஒரு நாள் அரங்கிலிருந்து விடைபெற்ற சோயப் மாலிக்!

உலகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விளையாட்டு

shoib malik - 2026

உலகக் கோப்பை தொடரில் தாம் பங்கு கொண்ட வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன், ஒருநாள் கிரிக்கெட் போட்டி அரங்கில் இருந்து ஒய்வு பெறுவதாக பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் அறிவி்த்தார்.

தனது ஓய்வு முடிவு குறித்து சோயப் மாலிக் தெரிவித்த போது…

கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பே ஒய்வு பெற முடிவு செய்திருந்தேன். தற்போது அதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே எனது 20 ஆண்டு கிரிக்கெட் வாழ்வுக்கு ஒய்வு கொடுக்க வேண்டி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுகிறேன்.

இனி நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்கப் போகிறேன். எனக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்த எனது குடும்பத்தினர், சக வீரர்கள், பயிற்சியாளர், பத்திரிகையாளர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி என்று குறிப்பிட்டார்.

சோயப் மாலிக் கடந்த 1999-ஆம் ஆண்டு சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார் முன்னதாக, கடந்த 2015ம் ஆண்டில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சோயப் மாலிக்! தற்போது, நேற்று நடந்த வங்கதேச அணிக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.sania - 2026

அண்மைக் காலமாக அதிக சர்ச்சைகளில் சிக்கினார் சோயப் மாலிக். அந்த சர்ச்சைகளை எதிர்கொள்வதில் அவரது மனைவி சானியா மிர்ஸா துணை நின்றார். தற்போது அவரது ஓய்வு முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சானியா மிர்ஸா, ஒவ்வொரு முடிவும் ஒரு புதிய விடியலின் ஆரம்பம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.