காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து!

உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

putin modi - 2026

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகைகளை ரத்து செய்தது, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது போன்றவற்றில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்ய அரசு கருத்து தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்…

“உண்மையான தகவல்களை ஆய்வு செய்ததில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகளை இந்திய அரசு ரத்து செய்ததும், அந்த மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்ததும், அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்திய அரசு செய்துள்ளது.

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பின் அதை சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைதியாகப் பேசித் தீர்க்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, இரு மாநிலங்களாகப் பிரித்தது போன்ற காரணங்களை வைத்து, எந்தவிதமான மோசமான சூழலும் தங்கள் பிராந்தியத்தில் உருவாவதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் அனுமதிக்கக் கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 thought on “காஷ்மீர் விவகாரம்: இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து!”

  1. மிகவும் நன்றி. நாம் இந்தியர்கள் அனைவரும் ரஷ்யா வின் கருத்தை வரவேற்று பாராட்டுகிறோம். என்றும் நமது நண்பன் ரஷ்யா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.