5 குழந்தைகள் உயிரிழந்த பரிதாபம் ! குழந்தைகள் காப்பகத்தில் பற்றிய நெருப்பு !

Published:

fire us 1 - 2026அமெரிக்க மாகாணம் பென்சில்வேனியா பகுதியில் ஒரு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கியுள்ளனர். இக்காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 1.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவு நேரம் என்பதால் குழந்தைகள் அனைவரும் தூக்கத்திலிருந்துள்ளனர். தீப்பற்றி எரிந்ததைக் கண்டு 12 வயது சிறுவர்கள் இருவர் அங்குள்ளவர்களை எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.அவர்களால் இயன்றவரை அங்கிருந்த குழந்தைகளை வெளியேற்றியுள்ளனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் தீயை அணைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டனர். காப்பகத்தின் முதல் தளத்திற்கு செல்ல முயற்சிக்கையில் அங்கு வெப்பப்புகை சூழ்ந்ததால் யாரும் அப்பகுதிக்குச் செல்ல முடியவில்லை. fire us1 1 - 2026இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்தில் 5 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள்  சுமார் 8 மாதம் முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகள் என தெரிய வந்தது. மற்றும் அந்த காப்பகத்தில் இருந்து பெண் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் காயமடைந்த மற்ற குழந்தைகளை காவல்துறையினர் பத்திரமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறனர்.

அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் காப்பகத்தில் தீ விபத்து ஏற்பட என்ன காரணம்? மின்சார கசிவு காரணமாக இருக்குமோ? அல்லது சமையலறையில் சரியாக அடுப்பைப் அணைக்காமல் விட்டதால்  இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்குமோ? என காவல்துறையினர் இரு தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Related articles

Recent articles

spot_img