ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ.,க்கு அனைத்து உரிமைகளும் உண்டு: ஜேத்மலானி!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

swami chidambaram - 2026

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்ய மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ.,க்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று மூத்த வழக்குரைஞர் மகேஷ் ஜேத்மலானி கூறியுள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பதில் அளித்த போது, சிதம்பரத்துக்கு எதிராக வாதாடிக் கொண்டிருக்கும் மூத்த வழக்குரைஞர் மகேஷ் ஜேத்மலானி, “நான் நிச்சயமாக நம்புகிறேன்… ப.சிதம்பரம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் இல்லை. இப்போது அவர் அகப்படவில்லை! அவரைக் கைது செய்ய இப்போது சிபிஐ.,க்கு அனைத்து விதமான உரிமைகளும் உண்டு! என்று கூறியுள்ளார்.

முன்னதாக, பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா இது குறித்துக் குறிப்பிடுகையில், ப.சிதம்பரம் Scam Kingpin என்று டில்லி உயர்நீதிமன்றம். விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார். மழுப்பலாக பதிலளித்தார் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. எனவே அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை வெளிவரும்… என்று கருத்திட்டிருந்தார்.

மேலும், வரும் ஆக.22ம் தேதி தில்லி திகார் சிறையில் அனேகமாக மு.க.ஸ்டாலின் அவரை சந்திக்கலாம்… என்று குறிப்பிட்டுள்ளார் ஹெச்.ராஜா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.