முன் ஜாமீன் மறுப்பு! ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ.,!

Published:

cbi in pchidambaram house - 2026

பா.சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு ஆறு அதிகாரிகள் கொண்ட சிபிஐ குழுவினர் சென்று உள்ளனர்!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்த நிலையில், மாலை அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் சென்று சம்மன் வழங்கினர்.

முன்னதாக, இன்று நடந்த விசாரணையில் உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றமும், அவரது வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க மறுத்துவிட்டது. நாளை புதன்கிழமை விசாரிக்கப் படும் என்று கூறியது.

chidambaram - 2026இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இன்று மாலை தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அப்போது ப.சிதம்பரம் வீட்டில் இல்லை. எனவே, சிதம்பரம் ஆஜராவதற்கான சம்மன் அளித்த அதிகாரிகள், அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் போது, அவருக்கு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் உதவியதுடன், அவருடன் வெகுநேரம் ஆலோசனையும் நடத்தியுள்ளார். தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் தொடர்ந்து எழுந்துள்ள சூழலையும் குறித்து அவருடன் விவாதிக்க, மூத்த வழக்குரைஞர்கள் சல்மான் குர்ஷித், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோரும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு தொடர்பாக விவாதித்தனர். அதே நேரம் உச்ச நீதிமன்ற தலைமை நிதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு, அவசர வழக்காக விசாரிக்காமல், புதன்கிழமை நாளை இதனை விசாரிப்பதாக கூறியது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img