ஆன்மீகத்தையும், தமிழையும் என்றென்றும் பிரிக்க முடியாது என்று வாழ்ந்திட்ட வாகீச கலாநிதி திரு.கி.வா. ஜகந்நாதன் பிறந்த நாள் இன்று!!
இன்று ஏப்ரல் 11 : கி. வா.ஜ என்றழைக்கப்படும் பிரபல எழுத்தாளர் கி. வா. ஜகந்நாதன் பிறந்த நாள்.
பிறப்பு:ஏப்ரல் 11, 1906 | இறப்பு: நவம்பர் 4, 1988. குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர், சிலேடைப் பேச்சாளர், நாட்டுப்புறவியலாளர், தேர்ந்த தமிழறிஞர் என பன்முகம் கொண்டவர். தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயரின் மாணாக்கர். கலைமகள் மாத இதழின் ஆசிரியராக 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர்.
1933ல் வித்வான் பட்டம் பெற்றார். 1949ல் திருமுருகாற்றுப்படை அரசு என்ற பட்டமும் 1951 ல் வாகீச கலாநிதி பட்டமும், 1982 ல் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப் பரிசும் பெற்றவர். 1967ல் இவரது “வீரர் உலகம்” என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கலைமகள் மாத இதழ் ஒவ்வோர் ஆண்டும் கிவாஜ., பெயரில் சிறுகதை போட்டி நடத்தி பரிசு வழங்குகிறது. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி ஆண்டு தோறும் வழங்கி வருகிறது. இவரது நூல்கள் அனைத்தும் அரசுடமை ஆக்கப்பட்டுள்ளன.
கி. வா. ஜ சிலேடை பேச்சில் வல்லமை பெற்றவர். அவரது சிலேடை பேச்சில் ஒன்று…
“சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.
“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“வண்ணாரப்பேட்டையி லிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ. “அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று”
“குழந்தைக்கு அதன் அம்மா உப்புமா ஊட்டிக் கொண்டிருந்தார். எதனாலோ அந்தப் பழைய உப்புமா குழந்தைக்குப் பிடிக்கவில்லை. அருகில் இருந்தார் கி.வா.ஜ.
‘உப்புமாவைத் தின்ன’ முடியலையோ! உப்புமா ஏன் தொண்டையைக் குத்துகிறதா” எனக் குழந்தையைக் கோபித்துக் கொண்டார் அந்தப் பெண்மணி.
கி.வா.ஜ. அந்தப் பழைய உப்புமாவை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு பார்த்தார். பிறகு, ”ஆமாம். இந்த உப்புமா தொண்டையைக் குத்தத்தான் செய்யும்” என்றார்.
ஏன் என்று அந்த அம்மா கேட்டார். ‘ஊசி இருக்கிறது’ என்று கூறிச் சிரித்தார் கி.வா.ஜ.!”
*கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை – மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்”
இந்த வருடம் கலைமகள் மாத இதழ் நடத்திய கிவாஜ., நினைவு சிறுகதைப் போட்டி (2021) பரிசளிப்பு விழா இணைய வெளியில் நடைபெறுகிறது.
இது குறித்த தகவல்…
விழாவுக்கு தலைமை ஏற்று எழுத்தாளர்களை சிறப்பிக்கிறார், இல. கணேசன் (பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர்)
வாழ்த்துரை: ஆடிட்டர் முனைவர் கலைமாமணி ஜெ. பாலசுப்பிரமணியன்
லண்டன் திரு. சுரேஷ்குமார்
பரிசு பெறும் எழுத்தாளர்கள்:
திருமதி கிரிஜா ராகவன்
திரு அனந்த் ரவி
திரு பால சாண்டில்யன்
இணைப்புரை: கலைமாமணி திரு சி.வி. சந்திரமோகன்
கூட்ட ஏற்பாடு கி.வா.ஜ. குடும்பத்தினர் மற்றும் கலைமகள் மாத இதழ்
உங்களை அன்புடன் வரவேற்கும்
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ஆசிரியர் கலைமகள்
பி.டி.டி.ராஜன் பதிப்பாளர் கலைமகள்
Zoom செயலி மூலம் கூட்டம் நடைபெறும் நாள் 11-4-2021 மாலை 6 மணி
Zoom Meeting ID: 858 3916 2704
Passcode: 262355