‘டிராமா’வளவன்… ‘நமது அம்மா’ சூட்டிய நாமகரணம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை தமிழகம் லைஃப் ஸ்டைல்
thirumavalavan2 - 2026

????இன அழிப்பை திட்டமிட்டு நடத்திய காங்கிரஸ் மற்றும் அதற்கு துணைபோன திமுகவோடு கூட்டணி வைத்திருக்கும் திருமாவளவன் முகத்தில் லண்டனில் ஈழத்தமிழர்கள் கரன்சியை தூக்கி அடித்திருக்கிறார்கள் என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சனம்????

லண்டனுக்கு போன டிராமா வளவனை துரத்தி அடித்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்… கரன்சியை வீசினாங்களாம்… காரி துப்பினாங்களாம்… இருக்காதா பின்னே..

கச்சத்தீவை சிங்கள இனவாத அரசுக்கு சீதனமாய் கொடுத்த திமுகவோடும் லட்சோப லட்சம் ஈழத் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை வீச ஆயுதம் பணம் அதிநவீன சாதனங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தையும் கொடுத்து ஒரு இன அழிப்பையே திட்டமிட்டு நடத்திய இத்தாலி காங்கிரஸ் மற்றும் அதற்கு மத்தளம் வாசித்த திமுக.,வோடும் இன்றுவரை கூட்டு வைத்துக்கொண்டு திருமா போடுகிற டிராமாவை இங்கிலாந்து வாழ் இலங்கைத் தமிழர்கள் காரித்துப்பி இருக்கிறார்கள்!

ரத்த வெறியன் ராஜபட்ச வீட்டுக்கே சென்று பந்தியில் அமர்ந்து தொந்தியை நிரப்பிக்கொண்டு பரிசுப்பெட்டி வாங்கிவந்த பாதகத்தை எல்லாம் நினைவுபடுத்தி… பணம் தானே உனக்கு வேண்டும் பொறுக்கிக் கொள் என்று பவுண்டுகளை வீசி எறிந்து தலை குனிய வைத்து இருக்கிறார்கள்!

இதில் மிகப் பெரிய கேவலம் என்னவென்றால் இங்கிலாந்தில் ஒரு விழாவுக்கு போனவரு காஷ்மீர் விவகாரம் குறித்து ரொம்பவே பொங்கி இருக்காரு!

namaduamma - 2026

மதவாத அரசு என்று பாஜகவை விமர்சிக்க போக நீ இனவாதம் பேசி நடித்தது எல்லாம் போதும்; பணமும் பதவியும் தான் பிரதானம் என்று அலையும் உனக்கெல்லாம் பொது வாழ்க்கை ஒரு கேடா என்று கேள்விகளால் வேள்வி நடத்தி இருக்கிறார்கள்.. மான ரோஷம் உள்ள ஈழத் தமிழர்கள்!

பிறகு என்ன போன மச்சான் திரும்பி வந்தாரு பூ மணத்தோடு என்னும் கதையாக இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய அவர் இப்போது வேதாரண்யம் விவகாரத்தை பிடித்து அதனை பெரிது படுத்தி வில்லங்கம் செய்யலாமா என்று ஆலோசனை செய்கிறாராம்!

திமுக என்கிற தேசவிரோத இயக்கத்தோடு தமிழின துரோகிகள் கொண்டிருக்கும் கூடாநட்பு தான் இப்படி அவருக்கு கேடாக நிற்கிறது என்றால் திருந்த வேண்டியது அவரது பொறுப்பு அல்லவா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.