ஜெயலலிதா சொத்துக் குவிப்பு மேல்முறையீடு வழக்கு: பிப்.2 முதல் இறுதி விசாரணை

சற்றுமுன்

புது தில்லி:
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில், தனி நீதிமன்ற தீர்ப்பை நீதிபதி குமாரசாமி ரத்து செய்ததுடன், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு அளித்தார்.

இதனை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த இரு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை ஜன. 8ஆம் தேதிக்கு அப்போது நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் விசாரணை நீதிபதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீதிபதி ஆர்.கே அகர்வாலுக்குப் பதிலாக அமித்வா ராய் விசாரிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது , ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன், ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்,. மேலும் தினமும் வழக்கை விசாரிப்பது குறித்தும், பிற வழக்குகளைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்றும், ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப். 2 ஆன் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.