பிரகதி பவனை முற்றுகையிட்ட வழக்கில்… கேசிஆரின் பேரன் கைது!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kcr-grandson-arrested
kcr-grandson-arrested

கொரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக மாநிலத்தில் நுழைவுத் தேர்வுகளை தாமதம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேஷனல் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா (என்எஸ்யூஐ) மாணவர்கள் புதன்கிழமையன்று பிரகதி பவனை முற்றுகையிட்டனர்.

அந்தச் சம்பவத்தில் பங்குபெற்ற முப்பத்தி ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது ஆனவர்களுள் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆரின் பேரன் ரித்தீஷ் கூட உள்ளார். ரித்தீஷ் கேசிஆரின் சகோதரர் மகளான ரம்யா ராவின் மகன்.

kcr-grandson-arrested1
kcr-grandson-arrested1

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தில் ரித்தீஷ் மீது எப்ஐஆர் கூட பதிவாகி உள்ளது. இந்த வழக்கில் அவரை ஐந்தாவது குற்றவாளியாக பதிவு செய்துள்ளார்கள். கைது செய்தவர்களை 14 நாட்கள் ரிமாண்டுக்கு அனுப்பி உள்ளனர்.

அதனால் கேசிஆரின் சகோதரர் மகள் ரம்யா ராவு டிஆர்எஸ் அரசாங்கத்தின் மீது ஆத்திரம் அடைந்துள்ளார். கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.