சூட்கேஸில் நண்பனை திணித்து… எடுத்துச் சென்ற போது பிடிபட்ட மாணவன்!

Published:

suitcase smuggle - 2026

சூட்கேஸில் நண்பனை அமர்த்தி எடுத்துச் செல்லும் போது பிடிபட்ட மாணவன்.

ஹைதராபாத்:- ஃப்ளாட்டுக்குள் தன் நண்பனை அனுமதிக்கவில்லை என்பதால் ஒரு மாணவன் ஒரு திட்டம் போட்டான். மங்களூரில் உள்ள அந்த அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸில் அசோசியேஷன்காரர்கள் புதியவர்களையோ வெளி மனிதர்களையோ உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று ரூல் போட்டிருந்தார்கள்.

தன் நண்பனை தன் ஃப்ளாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று மாணவன் எத்தனை வேண்டிக் கொண்டாலும் அவர்கள் கேட்கவில்லை.

அதனால் அந்த மாணவன் புத்திசாலித்தனம் என்று நினைத்துக்கொண்டு ஒரு திட்டம் தீட்டினார். ஒரு பெரிய சூட்கேசில் தன் நண்பனை அமர்த்தி வைத்து சூட்கேசை இழுத்துக்கொண்டேப்ளாட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சித்தார்.

ஆனால் சூட்கேசில் இருந்த நண்பன் ஒழுங்காக உட்காராமல் அங்கும் இங்கும் அசையத் தொடங்கினார். அதை பார்த்த அசோசியேஷன் மனிதர்களுக்கு சந்தேகம் வந்தது. சூட்கேசை திறந்து பார்த்தார்கள். மாணவனின் திட்டம் வெளிப்பட்டு விட்டது. இதனால் போலீசாரை அழைத்தார்கள்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

போலீசார் வந்து அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள். இருவரின் பெற்றோரையும் அழைத்து பேசி அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்தின் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img