ஏலியன்களை ஈர்க்க.. நிர்வாண புகைப்படம் அனுப்ப நாசா முடிவு!

Published:

aliens - 2026

அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் விண்வெளியில் இருக்கும் ஏலியன்களை தொடர்பு கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

விண்வெளியில் மனிதர்களோ அல்லது ஏலியன்களைப் போன்ற உயிர்கள் இருக்கலாம் என்பது இவர்களின் நம்பிக்கை. எனவே, இதுபோன்ற ஏலியன்களை தொடர்பு கொள்ளவும் ஆய்வாளர்கள் முயன்று வருகின்றனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் நாசா ஆய்வாளர்கள் விண்வெளியில் உள்ள ஏலியன்களை தொடர்பு கொள்ள முயற்சி ஒன்றை எடுத்துள்ளனர்.

nasa 1 - 2026

இந்த பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்தால், அவர்களைத் தொடர்பு கொள்ளும் வகையில் நாசா பைனரி செய்திகளைக் கொண்ட மெசேஜ்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.

வேற்றுக்கிரக வாசிகளைத் தொடர்பு கொள்வதே இந்த ‘Becon in the Galaxy’ (BITG) என்ற திட்டத்தின் இலக்கு ஆகும். இந்நிலையில் நாசா அனுப்பும் இந்த மெசேஜ்கள் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அடிப்படை கணிதம், இயற்பியல் கருத்துக்கள், பூமியில் உள்ள உயிர் வேதியியல் கலவை, பிரபஞ்சத்தில் நமது சூரியக் குடும்பத்தின் நிலை மற்றும் பூமியின் மேற்பரப்பின் நிலை குறித்த மெசேஜ்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!
nasa 1 1 - 2026

குறிப்பாகப் பிரபஞ்சத்தில் மிகவும் பொதுவான தனிமமாக அறியப்படும் ஹைட்ரஜன் குறித்த இமேஜ் வடிவத்தையும் நாசா ஆய்வாளர்கள் விண்வெளிக்கு அனுப்பி உள்ளனர்.

எந்தவொரு கிரகத்திலும் உயிர்கள் இருக்க வேண்டும் என்றால் ஆற்றலை உருவாக்க வேண்டும் அதற்கு ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் அவசியம் என்பதால் இந்த மெஜேஜ் அனுப்பப்பட்டு உள்ளது.

விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில் டிஎன்ஜி அமைப்பின் இமேஜும் உள்ளது. இதைப் பார்க்கும் வேற்று கிரக வாசிகளுக்கு யார் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து ஐடியா கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்துடன் ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண டிஜிட்டல் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டை ஹெலிக்ஸ் டிஎன்ஏ அமைப்பு மற்றும் பூமியில் ஈர்ப்பு விசையைக் குறிக்கும் வகையில் கீழ்நோக்கி விழும் ஒரு பொருள் உள்ளது.

alian - 2026

இதற்கு அருகிலேயே மனிதர்களை கைகளை அசைத்து, வரவேற்பது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. நாசா அனுப்பும் மெசேஜ்களில் இது தான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், இதன் மூலம் ஏலியன்களால் யார் தங்களைத் தொடர்பு கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முடியும் என்பதே நாசாவின் கணிப்பு.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

இந்த BITG மெசேஞ்களை பார்த்துப் படித்துப் புரிந்து கொள்ளும் ஏலியன்கள், மனிதர்களுக்குப் பதில் அளிக்க விரும்பினால், அவர்களுக்கு உதவும் வகையில் நமது சூரியக் குடும்பத்தின் முகவரியையும் ஆய்வாளர்கள் அனுப்பி உள்ளனர் அனுப்பியுள்ளனர்.

அந்த டிஜிட்டல் புகைப்படத்தில் சூரியன் மற்றும் நமது சூரியக் குடும்பத்தின் கிரகங்கள் வரிசையில் பூமி எங்கே உள்ளது என்பதை விளக்கும் வகையிலான துல்லியமான படத்தையும் ஆய்வாளர்கள் அனுப்பி உள்ளனர்,

Related articles

Recent articles

spot_img