
மழைக்கு ஒதுங்கிய பெண்மணி மீது சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிங்களம்கோம்பு பகுதியில் சரவணன்-பார்வதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பார்வதி தனது தோட்டத்தில் கூலி வேலை ஆட்களுடன் வேலை செய்து வந்துள்ளார். அப்போது பலத்த மழை பெய்த காரணத்தினால் பார்வதி தனக்கு சொந்தமான மாட்டுக் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நின்றுள்ளார்.
அப்போது பலமாக வீசிய காற்றினால் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் நின்று கொண்டிருந்த வேப்பமரம், மாட்டுக் கொட்டகையின் மீது விழுந்ததால் கொட்டகைக்குள் ஒதுங்கி நின்ற பார்வதி மீது சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பார்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பார்வதியுடன் சேர்ந்து மழைக்கு ஒதுங்கி நின்ற அப்பகுதியை சேர்ந்த 2 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த 2 பேரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எருமப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்..