சிலுவம்பாளையத்தில் பேரனுடன் சென்று வாக்களித்த முதல்வர்!

சற்றுமுன் தமிழகம்
cm - 2026

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களின் வாக்குக்களை செலுத்தி வருகின்றனர்.

eps vote - 2026

இந்த நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.

தனது பேரனை கையில் தூக்கிக் கொண்டு சென்று, வாக்களிக்கும் இயந்திரத்திடம் சென்று தனது வாக்கினை செலுத்தினார்.

eps - 2026

வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்,” என தெரிவித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க செல்வதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தவுசாயம்மாளின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.