IMG 20190716 WA0015 - 2026

அந்தச் செய்தி தெரிந்துதான் ஆளுநர் நரசிம்மன் அங்கே சென்றாரா?

ஆந்திரா புதிய ஆளுநராக பிஸ்வ பூஷன் ஹரிச்சந்தனை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதனால் ஆளுனர் நரசிம்மன் தெலங்காணாவிற்கு மட்டுமே பணிபுரிவார்.

ஆளுனர் மாறப்போகும் செய்தி அறிந்தவுடனே நரசிம்மன் விஜயவாடா சென்று ஜகனை சந்தித்தார்.

ஆந்திரப்பிரதேஷ் இணைந்த மாநிலமாக இருந்தபோது 2009 முதல் ஆளுநராகப் பணியாற்றிய ஈஎஸ்எல் நரசிம்மன் இனி தெலங்காணாவிற்கு மட்டுமே ஆளுநராக இருப்பார்.

ஒடிசாவைச் சேர்ந்த பிஜேபி தலைவர் பிஸ்வ பூஷனுக்கு அமைதியானவர் என்ற பெயர் உள்ளது.

அவரை நியமித்ததில் ஆந்திராவில் பிஜேபியின் கை ஓங்கி இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

கவர்னர் மாற்றம் குறித்து முன்னதாகவே நரசிம்மனுக்கும் இரு மாநில முதல்வர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.

அதனால்தான் சென்ற வாரம் நரசிம்மன் திடீரென்று ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்று வந்தார்.

பயணத் திட்டத்தில் இல்லாதபோதும் ஆளுநர் விஜயவாடா சென்று வந்ததால் ஆந்திராவுக்கு புது கவர்னர் வருவார் என்ற பிரசாரம் நடந்தது .

ALSO READ:  தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

ஒரு ஸ்டார் ஹோட்டலில் ஜெகனை நரசிம்மன் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் அவர்கள் இருவர் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

புது கவர்னர் வரப்போவதால் ஜெகனோடு தனக்குள்ள நட்புறவுகளை கவனத்தில் கொண்டு நரசிம்மன் அவரை சந்தித்தார் என்று கூறப்படுகிறது.

கவர்னராக எப்போது ஆந்திரா சென்றாலும் கட்டாயம் கோவிலுக்கு சென்று தரிசித்து வருவது நரசிம்மனின் வழக்கம் . ஆனால் சென்ற வாரம் ஆந்திராவுக்கு சென்ற போது மட்டும் ஆலய தரிசனம் செய்யாமல் திரும்பி வந்தார் நரசிம்மன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending