ஆரோக்கிய சமையல்: சுண்டைக்காய் வேப்பம்பூத் துவையல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Zucchini Neem Flower dhuvaiyal
Zucchini Neem Flower dhuvaiyal

சுண்டைக்காய் வேப்பம்பூத் துவையல்

தேவையான பொருட்கள்:
காய்ந்த சுண்டைக்காய் வற்றல் – 10, காய்ந்த வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு, கறுப்பு உளுந்து – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு சுண்டைக்காயை முதலில் வறுத்து எடுக்கவும். பின்னர் அதே வாணலியில் வேப்பம்பூவை வறுத்து எடுக்கவும். பிறகு உளுந்தையும் காய்ந்த மிளகாயையும் ஒன்றாக வறுத்து எடுக்கவும். வறுத்த வேப்பம்பூ, சுண்டைக்காய், கறுப்பு உளுந்து, காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை இவற்றுடன் உப்பு, புளி, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைக்கவும்

குறிப்பு: சூடான சாதத்துடன் துவையலைச் சேர்த்து நெய் அல்லது எண்ணெய்விட்டு சாப்பிடலாம். சுட்ட அப்பளம் இதற்குச் சிறந்த காம்பினேஷன்.

ALSO READ:  ஆவணி அவிட்டம்; விஸ்வகர்ம சமுதாயத்தினர் பூணூல் மாற்றி வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.