தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் நாளை வியாழக்கிழமை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடக்கிறது .
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதன்மையான தலமான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கோலாலமாக கொண்டாடப்படுகிறது முக்கிய நிகழ்வாக மறுநாள் திருக்கல்யாண விழாவும் கொண்டாடப்படுகிறது.
இந்த விழா திருச்செந்தூரில் நடைபெறுவது போல் தென்காசி மாவட்டத்தில் பிரபலமான முருகன் கோவில்களில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா நாளை மாலை நடக்கிறது
சிவகிரி கூடார பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கூடலூர் நாதகிரி முருகன் கோவில் திரும பண்பொழி திருமலை கோவில் இலஞ்சி வரதராஜ வரதராஜ முருகன் கோவில் ஆகிய கோவில்களில் இந்த விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது
இதுபோல் முக்கிய கோவில்களில் முருகன் சன்னதியில் கந்த சஷ்டி சிறப்பு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நடத்தி சூரசம்கார விழா நடத்தப்படுகிறது.
முக்கியமாக தென்காசி அருகில் உள்ள ஆய்குடி முருகன் கோவில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும் இங்கு திருச்செந்தூருக்கு அடுத்ததாக அதிக அளவில் சூரசம்கார விழாவை காண பக்தர்கள் கூடுகின்றனர் நாளை மாலை இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாலமாக நடக்கிறது