கருப்பு தினமா? வெளுத்து வாங்கிய மோடி! வெளிறிப் போன வைகோ!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
vaiko - 2026

பிரதமர் மோடி மக்களவை மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் தற்போதைய கூட்டத் தொடரில் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி வருகிறார்! இந்தக் கூட்டத் தொடரின்போது, பெரும் பரபரப்பான விஷயமாக இருந்தது, காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் விஷயத்தில், டியூப் லைட் என்று குறிப்பிட்டது!

அது போல், காஷ்மீர் விவகாரத்தில் மூக்கை நுழைத்து தேவையற்ற கருத்துகளைக் கூறி பிரிவினைவாதிகளுக்கு வால் பிடித்த வைகோவை ஒரு பிடி பிடித்தார் பிரதமர் மோடி.

கடந்த 6 மாதங்களில் மோடியை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததற்கு நேரடியாக பதில் அளித்து வருகிறார் பிரதமர் மோடி. மக்களவையில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்தது போல், வைகோவை மாநிலங்களவையில் பிரித்து மேய்ந்தார்.

கடந்த 5 ஆகஸ்ட் 2019 காஷ்மீருக்கு ஒரு கருப்பு நாள் என்று வைகோ கூறினார். வைகோ… தெரிந்து கொள்ளுங்கள் இது காஷ்மீருக்கு கருப்பு நாள் அல்ல, பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் ஊக்குவித்தவர்களுக்கு இது ஒரு கருப்பு நாள்! எழுதி வைத்துக் கொள்ளுங்கள் நடக்கும்!

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் உரிமை பறிக்கப்படுகிறது என புலம்புபவர்கள் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் நிலையை என்றாவது நினைத்து பார்த்தது உண்டா? உங்களுக்கு எல்லாம் அதற்கு நேரம் இருக்கிறதா? இந்தியாவில் NPR நிச்சயம் தேவை எனவும் ஓவ்வொரு மாவட்டத்திலும் கணக்கெடுப்பு அமல்படுத்தப்படும்! என்றார்.

பிரதமர் பதிலடி கொடுத்த நேரத்தில் வைகோ முகத்தில் கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.