
திக, திமுக, காங்கிரஸ் வகையறா கூட்டணியின் முறையினர் எல்லோரும் திடீரென்று இந்த ஆண்டு தைப்பூசத்துக்கு பழனிக்கோ திலுச்செந்தூருக்கோ உள்ளூர் முருகன் கோவிலுக்கோ காவடி எடுப்பதும், அன்னதானம் உள்ளிட்ட தொண்டுகள் செய்வதுமாக விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

ஈவெரா தாக்கம் மண்ணோடு மண், இது ஆன்மிக பூமி என்று புளகாங்கிதம் அடைந்து பேரானந்தப்படும் முன்னர் நினைவில் கொள்ளவேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன.
2021 தேர்தலில் திமுகவுக்கு வெற்றி கிட்டுவதில் உள்ள சிக்கல்களைக் களையெடுக்க வேண்டும்.
திமுகவின் இமேஜை பழங்கால காங்கிரஸ் அளவுக்காவது கொண்டு வந்து இவர்கள் நல்லவர்கள் என்று திமுகவுக்கு எதிரான மக்களை நம்பச்செய்ய வேண்டும்.

அதைச் செய்ய அமர்த்தப்படிருக்கும் நபர் பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கோச் புக்கானன் பாணி. வெற்றியே முக்கியம். நெறிமுறைகள் கிடக்கட்டும் என்பதே அது. திமுகவுக்கும் இது புதிதல்ல.
- அருண்பிரபு ஹரிஹரன்



