நினைத்த காரியம் நடந்தேற நீங்கள் இதைச் செய்யுங்கள்!

perumal 1 - 2026

பொதுவாக நாம் கோவிலுக்கு செல்கையில் நெய் விளக்கேற்றுவது வழக்கம். ஆனால் திருக்கோட்டியூர் என்னும் ஊரில் உள்ள பெருமாள் கோவிலில் நாம் விளக்கேற்றினால் நமது வாழ்வில் உள்ள குறைகள் நீங்குவது திண்ணம்.

108 திவ்யதேசங்களுள் ஒன்றான இந்த கோவிலில் மாசி மாதம் நடைபெறும் விழாவானது பெரிதும் விசேஷமானது. அந்த சமயத்தில் இங்கு விளக்கு பிராத்தனை என்றொரு பிராத்தனை நடைபெறுவது வழக்கம்.

மற்ற கோவில்களில் எல்லாம் நாம் விளக்கேற்றிவிட்டு அந்த விளக்கை கோவிலிலேயே விட்டுவிட்டு வந்து விடுவோம். ஆனால் இங்கு அப்படி அல்ல. நாம் ஏற்றிய விளக்கை கோவிலில் இருந்து வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம்.

deepamdiwali1 - 2026

விளக்கேற்றுகையில் பெருமாளிடம் ஏதாவது ஒரு கோரிக்கையை வைத்து அதை நிறைவேற்றி வைக்கும்படி மனதார வேண்டிக்கொண்டு தெப்பக்குளத்தை சுற்றி இங்கு பலர் இரு விளக்குகளை ஏற்றுகின்றனர்.

அப்படி ஏற்றப்படும் விளக்கானது எரிந்து முடிந்த உடன் அந்த விளக்கினை வீட்டிற்கு எடுத்து செல்வது வழக்கம். அந்த விளக்கை வீட்டின் பூஜை அறையில் வைத்து பிராத்தனை நிறைவேறும் வரை அதை தினமும் ஏற்ற வேண்டும்.

அப்படி ஏற்றுகையில் விளக்கில் ஒளி வடிவில் பெருமாள் வந்து நமக்கு அருள்புரிந்து நமது பிராத்தனைகளை நிறைவேற்ற செய்வார் என்பது ஐதீகம்.

theppakulam - 2026

பிராத்தனை நிறைவடைந்ததும் மீண்டு அடுத்த வருடம் தெப்போற்சவத்துக்கு வந்து பழைய விளக்கோடு சேர்த்து 5, 7, 9 என்ற எண்ணிகையில் பல விளக்குகளை பக்தர்கள் ஏற்றி பெருமாளுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த பிராத்தனையை பெரும்பாலானோர் தெப்போற்சவம் சமயத்தில் தான் பலரும் செய்கின்றனர். ஆனாலும் இதை மற்ற நாட்களிலும் செய்யலாம். அப்படி செய்ய நினைப்போர் அங்குள்ள பட்டாச்சார்யரிடம் சொல்லி சரியான முறையை அறிந்து விளக்கேற்றுவது நல்லது.

பெருமாளின் நட்சத்திரம் திருவோணம் என்றாலும் இங்கு சித்திரை மாதத்தில் ஆதி பிரமோட்சவம் நடக்கிறது. இதற்க்கு காரணம் இங்கு சித்திரை நட்சத்திரத்தில் தான் பெருமாள் எழுந்தருளி உள்ளார்.

இந்திரனால் பூஜிக்கப்பட்ட இந்த பெருமாள் கதம்ப மகரிஷிக்கு அருள்பாளிக்க இங்கு வந்ததாக கூறப்படுகிறது. பல சிறப்புகள் மிக்க இந்த பெருமாளை நாமும் வணங்குவோம் நம்முடைய குறைகள் தீர விளக்கேற்றி அவரிடம் பிராத்திப்போம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories