இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டவர் மருத்துவ விசா இன்றியே சிகிச்சை பெறலாம்!

இந்தியா சற்றுமுன் சுற்றுலா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kauvery hospital - 2026

இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மருத்துவ விசா பெறாமல் நாட்டில் எங்கும் சிகிச்சை பெறலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் மருத்துவ விசா இல்லாமல் வரும் வெளிநாட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மட்டும் பெற இயலாது என்றும் ஏற்கெனவே நோயால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் கொண்டுள்ள முதன்மை விசாவின் மூலம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும் உள்துறை அமைச்சகம் அறிக்கையில் கூறியுள்ளது.

satyasai heart hospital rajkot - 2026

ஏற்கெனவே செல்லுபடியாகும் விசாக்களைக் கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் சிலர் இந்தியாவில் தங்கியிருந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது .

சிறிய அளவிலான நோய் மற்றும் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவருக்கு மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சை மட்டும் தேவை எனும் பட்சத்தில் ஏற்கெனவே பெற்றுள்ள அசல் முதன்மை விசா மூலம் எந்தவொரு மருத்துவமனையும் அவர்கள் அணுகி உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.