நெல்லை மாவட்டம் பண்பொழி 14வது வார்டு ராஜிவ்நகரில் சலவை தொழிலாளர்
சமுதாயத்திற்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் தனது தொகுதி
மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சம் செலவில் சலவை தொழிலாளர் சலவை கூடம், ஆழ்துளை
கிணறு, மின் மோட்டார் அமைக்க அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :
மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ குறித்த செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது
பணகுடி போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், வழக்கை வாபஸ் பெறக்
கோரி நெல்லையில் அறவழியில் போராடிய பத்திரிகையாளர்கள் மீது போலீசார் நடத்திய
தாக்குதல் சம்பவம் மிகவும் கண்டனத்துக்கு உரியது.
பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வது என்பது ஜனநாயகத்தின்
குரல்வளையை நெறிப்பதாகும் என அவர் கண்டனம் தெரிவித்தார்.




