வழக்கம் போல் … சிதம்பரத்துக்கு சிபிஐ., நீதிபதி ஓ.பி.சைனி சலுகை..! முன்ஜாமின் வழங்கல்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
opsaini cbi special court judge - 2026

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி தில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி உத்தரவு பிறப்பித்தார்.

‘ஏர்செல்’ நிறுவனத்தில் ‘மேக்சிஸ்’ நிறுவனம் அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு அனுமதி அளித்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளன.

இந்த வழக்குகளில் முன்ஜாமின் கேட்டு இருவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி சிறப்பு நீதிமன்றம், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன்ஜாமின் வழங்கியது.

அப்போது, இருவரும் வெளிநாடு செல்லக்கூடாது. ரூ.1 லட்சம் பிணைத்தொகை செலுத்த வேண்டும். விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.