எனை நோக்கி பாயும் தோட்டா! ரீலிஸில் தொடர்ந்து பாயும் சிக்கல்!

Published:

enai noki paayum thota - 2026

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இந்த படத்தில், தனுஷ்க்கு ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

enpt 1 - 2026

தர்புகா சிவா இசையமைத்திருக்கும் இந்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார்.படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டில் தொடங்கியது. கடந்த ஆண்டில் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்தது.

இதைனையடுத்து படத்தை திரையிட படக்குழுவினர் தயாரானபோது, தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் படம் வெளியாவதில் மேலும் சிக்கல்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

enpt 1 1 - 2026

இதனிடயே தயாரிப்பு நிறுவனம் கடன் பிரச்சனை தீர்ந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக சமீபத்தில் செய்திகள் பரவின. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அடங்கிய டிரைலரை நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது .

அதன்படி இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இந்நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இதனிடையே இப்படம் செப்டம்பர் 6ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு புரமோஷன் பணிகளும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதான வழக்கு ஒன்றில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் இந்த படம் நாளை ரிலீசாக வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

Related articles

Recent articles

spot_img