
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் 11ம் வகுப்பு மாணவன். தனது தந்தையின் காரை எடுத்துகொண்டு அருகில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றுள்ளார். அங்கு ஒரிடத்தில் காரை நிறுத்திவிட்டு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், தாங்கள் போலீஸ்காரர்கள் என்று கூறி இங்கு ஏன் நிற்கிறீர்கள் என்று மாணவர்களை மிரட்டியுள்ளனர்.
இதன்பிறகு மாணவர்களை காரில் ஏற்றிக்கொண்டு பீர்வாங்க சென்றுள்ளனர். அப்போது மாணவன் ஓட்டிச்சென்ற கார் மற்றொரு கார் மீது மோதியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் திருமங்கலம் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

மாணவன் மற்றும் 2 வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவனிடம் விசாரணை நடத்தியதில், ” டிரைவிங் லைசென்ஸ் இல்லாததால் மாணவனின் தந்தையை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து காவல் நிலையம் வந்த தந்தை, ‘ என் அனுமதி இல்லாமல் காரை எடுத்து ஓட்டி வந்துவிட்டான்’ என்றார்.
இதையடுத்து, மாணவர்களை மிரட்டிய வாலிபர்களை காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ”அண்ணாநகரை சேர்ந்த எபி(எ) எபிரேசர்(24), திருமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்(19) என்பதும் இவர்கள் மீது ஏற்கனவே கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டி வந்த மாணவனிடம் விசாரணை நடத்துகின்றனர்.