
ரஷ்யாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார். ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ள நல்லுறவைப் பற்றி பெருமிதம் பொங்கக் கூறிய மோடி, தாம் 18 வருடம் முன் ரஷ்யாவுக்கு வந்த போது, தம்மிடம் வெகுவாக நட்பு பாராட்டிப் பேசியவர் புடின் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2001 ல் ரஷ்ய பயணத்தை நினைவுகூர்ந்த மோடி, நான்கு படங்களையும் அதன் நினைவாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
ரஷ்ய அதிபர் புடினைச் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சு நடந்துள்ளது. அப்போது இரண்டு நாடுகளுக்கு இடையேயான ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

புடினுடன் மேற்கொண்ட சந்திப்புக்குப் பின், தனது டுவிட்டர் பதிவில் நான்கு புகைப்படங்களை வெளியிட்ட மோடி, அது குறித்து தனது பழைய நினைவுகளையும் அசை போட்டார்.
கடந்த 2001 முதல் 2009 வரையிலான நினைவுகளும் முக்கிய தருணங்களும்!
இந்தியா – ரஷ்யா இடையிலான 20வது மாநாட்டில் இன்று பங்கேற்கின்றேன். அதே நேரம், கடந்த 2001ஆம் ஆண்டில், பிரதமராக இருந்த வாஜ்பாய் உடன், இந்தியா, ரஷ்யா இடையிலான மாநாடு குறித்த மாநாடு குறித்து யோசிக்கிறேன். அப்போது, வாஜ்பாய் குழுவில், குஜராத் முதல்வராக இருந்த நான் இடம்பெற்றது பெருமையாக இருக்கிறது. என்று கூறியுள்ளார்
மேலும் அப்போது தாம் குஜராத் முதல்வராக இருந்து அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தாலும், தம்மை தனிப்பட்ட வகையில் ரஷ்ய அதிபர் புடின் வரவேற்று நட்பு பாராட்டினார் என்று குறிப்பிட்டுள்ளார் மோடி. அந்த நட்பு இன்று வரை தொடர்வதாகவும் அவர் கூறினார்.