கசக்காதுங்க! பாவற்காய் வற்றல் குழம்பு!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
paakar 1 - 2026

பாகற்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

பாகற்காய் வற்றல் – அரை கப்,

புளி – 50 கிராம்,

கடுகு – அரை டீஸ்பூன்,

பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,

பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை – சிறிதளவு,

எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

வறுத்து அரைக்க:

கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,

வெந்தயம் – அரை டீஸ்பூன்,

தனியா – 2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 5.

செய்முறை:

kuzhambu 1 - 2026

கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு வறுத்து… ஆற வைத்து மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு பாகற்காய் வற்றலை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் இருக்கும் அதே எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதிக்க ஆரம்பித்ததும், வறுத்த பாகற்காய், அரைத்த கலவை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.